கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் மட்டக்களப்பில் திறந்துவைப்பு
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் மட்டக்களப்பில் இன்று திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு,கல்லடி,உப்போடை நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வீதியில் இந்த அலுவலகம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பி.திபாகரசர்மா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய,மீன்பிடி,கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண விவசாய,மீன்பிடி,கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் க.சிவநாதன் உட்பட அமைச்சின் அதிகாரிகள்,கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதுவரை காலமும் தற்காலிக கட்டிடத்தில் இயங்கிவந்த மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் மாகாண அமைச்சின் 40 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட நிரந்தர கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதன்போது புதிய கட்டிட திறப்பு விழாவினை குறிக்கும் வகையில் மரங்களும் நடப்பட்டதுடன் கூட்டுறவு ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.