செய்திகள்

கூறியபடி மலையக மக்களுடைய குடியிருப்பை உறுதிப்படுத்தியுள்ளோம்: அமைச்சர் பழனி திகாம்பரம்

மலையகத்தில் பல அரசியல் தலைவர்கள் இருந்தபோதிலும் நாங்கள் கூறியதுபோல் மலையக மக்களுடைய குடியிருப்பை உறுதிப்படுத்தி மக்களுக்கு உறுதிபத்திரம் வழங்குயது பெருமைகுரிய விடயமாகும் என தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தலவாக்கலையில் 10.05.2015 அன்று இடம்பெற்ற தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொன் விழாவில் கலந்து கொண்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவா் இவ்வாறு தெரிவித்தார்.

அவா் மேலும் இங்கு உரையாற்றுகையில்…

எமது நாட்டில் பல அரசாங்கம் இருந்தபோதிலும் மலையக மக்களினுடைய வாழ்க்கையும் அவர்கள் இருக்கும் குடியிருப்பு தொடர்பாகவும் பெரியளவில் அக்கறை கொள்ளாதவர்களே ஆட்சியில் இருந்துள்ளனர்.

அந்நவகையில் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற மைத்திரிபால சிரிசேன அவா்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இம்மக்கள் வாழும் குடிருப்புகளுக்கு தனி வீடு கட்டி அவ்வீடுகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கிய இவர்களுக்கு மலையக மக்கள் நன்றியுள்ளவா்களாக இருப்பார்கள்.

எதிர்காலத்தில் இந்த அரசாங்கமே தொடர்சியாக இருக்கும். எதிர்காலத்தில் மலையக மக்களுடைய பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உறுதி மொழியளித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

அடையாளம் இல்லாமல் வாழ்கின்ற மலையக மக்களுக்கு அடையாளத்தினை பெற்றுக்கொடுப்பதில் தொழிலாளர் தேசிய சங்கம் முன்னின்று உழைத்துள்ளது.

அத்தோடு இம்மக்களின் தேவைகளையும் அவா்களின் அபிலாசினைகளையும் அறிந்து செயல்படுவதில் ஒருபோதும் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை.

மேலும் மலையக மக்களை நாங்கள் தான் பிரதிநிதித்துவபடுத்துவோம் என கூறிக்கொண்ட அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடமாகும்.

எனவே இம்மக்களுக்கு எதிர்காலத்தில் இந்திய அரசாங்கத்தின் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி லயன் அறைகளில் வாழும் எல்லா மக்களுக்கும் தனிவீடு அமைத்து உறுத்திபத்திரதுடன் வாழ வழிவகுப்போம் என மேலும் தெரிவித்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=UIVLMBmp1vg&feature=youtu.be” width=”500″ height=”300″]