செய்திகள்

கெக்கிராவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் பலி

கெக்கிராவ பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று லொரியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளிலில் பயணித்த தந்தையும் 4 வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.
இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மற்றுமொரு மகளும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.