செய்திகள்

கெசல்கமுவ, டிக்கோயாவில் பிரதேசவாசிகளால் ஆற்றுநீர் மாசடைகிறது

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீரை கொண்டுச் செல்லும் பிரதான இரு ஆறுகளான, கெசல்கமுவ மற்றும் டிக்கோயாவில் பிரதேச வாசிகள் குப்பைகளை கொட்டுவதால் சூழல் மாசடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கெசல்கமுவ ஓயா பொகவந்தலாவை மஹஎலிய வனப்பகுதிலிருந்து ஆரம்பிப்பதுடன்இ அங்கிருந்து 20 கிலோமீற்றர் தூரம் வரை அந்த ஆற்றின் இருமருங்கிலும் பிரதேசவாசிகள் குப்பைகளை கொட்டுகின்றனர்.

அத்துடன் அட்டனிலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு செல்லும் டிக்கோயாவிலும் அட்டன் நகர வர்த்தக நிலையங்களிலிருந்து குப்பைகளை கொட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறித்த இரண்டு ஆறுகளையும் மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் குப்பைகளை கொட்டுவதால் ஆற்றின் நீரை பயன்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது. இரவு நேரங்களிலேயே குப்பைகள் கொட்டப்படுவதாகவும். குறித்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்இ நீர்த்தேக்கத்திலுள்ள நீர் களனி கங்கையில் கலப்பதால் அந்த ஆற்றை பயன்படுத்தும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.ஆகவே குறித்த ஆறுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீரை பாவிப்போர் கோரிக்கை விடுக்கின்றனா்.

river