செய்திகள்

கெடுபிடிகளின் மத்தியில் வாகரையில் தமிழ் இன அழிப்பு நாள் நிகழ்வு

தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்மாவட்டம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரையிலும் மட்டக்களப்பு மாவட்டம் வாகரையிலுள்ள மாணிக்கபுரம் வாவி ஒரத்திலும் இடம்பெற்றது.

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வு கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வு மலைமுரசு பத்திரிகை ஆசிரியர் ஸ்ரீஞனேஸ்வரன் அவர்கள் தலைமையிலும் இடம்பெற்றது.

வாகரையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கலந்து கொண்டிருந்தார். மேலும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ஹரிகரன் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுரேஸ் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் செல்லையா இராசையா உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் உட்பட திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் வாகரையில் நடைபெற்ற இன அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வில் சுமார் 400 வரையான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மேற்படி நிகழ்வில் அருட்பணி பிரபாகர் அடிகளார் கலந்து கொண்டு சமயவழிபாடுகளை நடாத்தியிருந்தார். அதன் பின்னர் இறந்த பொது மக்களை நினைந்து நினைவுச் சுடரேற்றப்பட்டது. அனைவரும் சுடரினை ஏந்தி வாகரை வாவியொரத்தில் நின்று இறந்த உறவுகளை நினைந்து பிரார்த்தலையில் ஈடுபட்டனர்.

மேற்படி நிகழ்வு கடுமையான இராணுவ மற்றும் பொலிஸ் உளவுத்துறையினரது கெடுபிடிகளுக்க மத்தியிலிலேயெ இடம் பெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்கள் உயிரிழந்த தமது உறவினர்களை நினைந்து வாய்விட்டு அழுவதற்ககூட முடியாதளவுக்கு உளவுத்துறையினரது கெடுபிடிகள் அதிகமாகவிருந்தது.

சுமார் 20திற்கும் மேற்பட்ட உளவுத்துறையினர் புகைப்படக்கருவிகள்இ காணொளிகளுடனும் கலந்துகொண்ட பொது மக்களை படம்பிடித்த வ்ண்ணமிருந்தமையினால் அப்பகுதி எங்கும் பெரும் பதற்றம் நிலவியது.1