செய்திகள்

கென்யப் பல்கலையில் புகுந்து கிறிஸ்தவ மாணவர்களை தேடித் தேடிச் சுட்டுக் கொன்ற அல்கசாப் தீவிரவாதிகள் (காணொளி, படங்கள்)

கென்யாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பல்கலைகழகமொன்றிற்குள் நுழைந்து அல்சகாப் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவானவர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

ஹரிசா பல்கலைக்கழகத்தின் மீது அல்சகாப் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 65 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், 500 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கென்யா –சோமாலியா எல்லையிலுள்ள பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கிறிஸ்தவ மாணவர்களை பணயக்கைதிகாளாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ள அல்சகாப் முஸ்லீம் மாணவர்களை விடுதலை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. தாங்கள் பணயக்கைதிகளாக பிடித்துள்ள மாணவர்களை இரு குழுக்களாக பிரித்துள்ளதாகவும், அந்த அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

_82080272_026589623-1

தங்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் ஓவ்வொரு கதவையும் திறந்து உள்ளே ஓளிந்துள்ளவர்கள் கிறிஸ்தவர்களா அல்லது முஸ்லீம்களா என கேட்டதாகவும்,கிறிஸ்தவ மாணவர்களை கண்ணிற்கு முன்னாள் சுட்டுக் கொன்றதாகவும் உயிர்தப்பிய கொலின்ஸ் வெட்டன்குல என்ற மாணவன் தெரிவித்துள்ளான்.

ஜன்னல் வழியாக நுழைந்த பாதுகாப்பு அதிகாரிகள் தங்களை பாதுகாப்பாக மீட்டதாகவும் அந்த மாணவன் தெரிவித்துள்ளான்.

மிகவும் பயங்கரமாக காணப்பட்டது, எல்லா திசைகளிலும் துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றன என அந்த மாணவன் மேலும் தெரிவித்துள்ளான். மிகவும் கொந்தளிப்பான பகுதியில் அமைந்துள்ள அந்த பல்கலைகழகத்திற்கு இரு பொலிஸாரே பாதுகாப்பைவழங்கியதாகவும் அந்த மாணவன் குறிப்பிட்டுள்ளான்.

ஆயுதமேந்திய ஐவர் தங்கள் முகத்தை மறைத்தபடி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து தாக்குதலை ஆரம்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒருவரை தாங்கள் சுட்டுக் கொன்றுள்ளதாக கென்யா உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் 815 மாணவர்கள் இருந்ததாகவும், அவர்களில் 500பேரிற்கு என்ன நடந்தது என்பது தெரியாது எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பலமாணவர்கள் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதை சம்பவம் நடைபெற்ற இடத்திலுள்ள பொலிஸார் உறுதிசெய்துள்ளனர். எத்தனை பேர் என்பது தெரியாது ஆனால் பல்கலைக்கழகம் இயங்கிக் கொண்டிருந்ததால் பலர் பிடிபட்டிருக்கலாம் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

_82077209_82077208

50 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், பலரிற்கு இதுவரை என்ன நடந்தது என்பது தெரியாது எனவும் கென்யாவின் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூடு ஆரம்பித்ததும் பல்கலைக்கழகத்திலிருந்து தப்பியோடிய சில மாணவர்கள் தனது வீட்டில் தஞ்சம் புகுந்ததாக ஆசிரியi ஒருவர் தெரிவித்துள்ளார்.

வகுப்பறையொன்றிற்குள் பல இரத்தம் தோய்ந்த உடல்கள் காணப்படும் புகைப்படமொன்று வெளியாகியுள்ளமை உயிரிழப்புகள் அதிகமாகயிருக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.