செய்திகள்

கெயிலை கட்டுப்படுத்துவது எப்படி: இந்தியாவின் தற்போதைய கவலை

மேற்கிந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிறிஸ்கெயில் அல்லது தென்னாபிரிக்கா அணி தலைவர் ஏ.பி டிவிலியர்ஸ் போன்றவர்கள் சிறப்பாக விளையாடும் தருணங்களில் பந்து வீச்சாளர்களால் எதுவும் செய்ய முடியாது என இந்திய அணிதலைவர் மகேந்திரசிங் டோனி தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மேற்கிந்திய அணியுடன் இந்திய விளையாடவுள்ள நிலையிலேயே அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.  இரு வீரர்களும் இந்திய அணியின் தலைவரிற்கு அதிக கவலையளிக்க கூடியவர்கள் என்பதுடன் இவர்களை எதிர்கொள்ளும்போது இந்திய அணி நுட்பமான திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும்.
எனினும் தென்னாபிரிக்காவுடனான போட்டியில் ஆரம்பத்திலேயே டிவிலியர்ஸ் ரன்அவுட் ஆனதால் இந்திய அணி நெருக்கடிகளை எதிர் ள்ளவில்லை.  எனினும் கெய்ல் சிம்பாப்வே அணிக்கு ஏற்படுத்திய நிலையை இந்தியாவிற்கும் ஏற்படுத்துவதை தடுக்க வேண்டிய நிலையில் டோனி உள்ளார்.

கெயிலை கட்டுப்படுத்துவதற்கான இந்திய அணியின்திட்டம் என்னவென்ற கேள்விக்கு கெயில், ஏ.பி, மக்கலம் போன்ற வீரர்கள்அடித்து நொருக்கும்போது எந்தவித திட்டங்ளும் இல்லாமலிருப்பதே சிறந்த திட்டம் என டோனி தெரிவித்துள்ளார்.  இவர்களை போன்றவர்கள் சிக்சர்களாக அடிக்கதொடங்கினால் உங்களால் அதனை கட்டுப்படுத்துவதற்காக களத்தடுப்பை அமைக்க முடியாது,
மேலும் சோர்ட் பிச் பந்துகளை வீசினாலும் , அவர்கள் அதனையும் அடிக்கும் பட்சத்தில் உங்கள் மோதல் தோல்வியடையலாம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள், தாங்கள் பந்துவீசும் விதத்தினை மாற்றிக்கொண்டிருப்பதன் மூலம் இ;வ்வாறான துடுப்பாட்ட வீரர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்த முயலலாம்,இதைதவிர நிரந்தர திட்டம் எதனையும் வைத்திருக்க முடியாது, இதனை செய்தால் அவர்கள் ஆட்டமிழப்பார்கள் அல்லது அவர்களை கட்டுப்படுத்தலாம் என உறுதியாக கூற முடியாது எனடோனி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவர்கள் தங்கள் பாணியில் விளையாடும்போது அவர்கள் வழங்குகின்ற சிறிய வாய்ப்புகளையும் தவறவிடக்கூடாது.  இந்த விடயத்தையே பந்துவீச்சாளர்கள் கவனம் செலுத்தவேண்;டும்,களத்தடுப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்களுக்கு முழு ஆதரவை வழங்கவேண்டும்.சிறிய வாய்ப்பையும் நீங்கள் பயன்படுத்தினால்,பந்துவீச்சாளர்கள் மீதான அழுத்தத்தை அது குறைக்கும், நீங்கள் ஒரு குழுவாக வேட்டையாடவேண்டும் எனவும் டோனி தெரிவித்துள்ளார்.