செய்திகள்

கே.பி. தொடர்பில் 6 மாதத்தில் முழமையான அறிக்கை: நீதிமன்றில் தகவல்

விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை 6 மாதத்தில் நீதிமன்றில் சமர்ப்பிப்பதாக சட்டமா அதிபர், இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கே.பி. கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி. தாக்கல் செய்திருந்த மனு தொடர்பிலேயே சட்டமா அதிபர் இந்தத் தகவலை இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.