செய்திகள்

கே.பி.யை கைது செய்வதா? விசாரணைக்குள்ளாக்குவதா?? சட்டமா அதிபரிடம் நீதிமன்றம் கேள்வி

விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதனை( கே.பி) கைது செய்வதா அல்லது விசாரணைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபரைக் கேட்டுள்ளது.

ஜே.வி.பி. யினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று செவ்வாய்க்கிழமை ஆராய்ந்த போதே நீதியசர்கள் குழாம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த மனு, மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவினால் ஆராயப்பட்டதுடன் அந்த உத்தரவு சட்டமா அதிபருக்கே பிறப்பிக்கப்பட்டுள்ளது.