செய்திகள்

கைதிகளை வெசாக் தினத்தில் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் முதலமைச்சர் கோரிக்கை

உத்தியோகபூர்வமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு வெசாக் புனித தினத்தில் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே வடக்கு முதல்வர் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார். காணாமற்போனோர் மற்றும் எந்தவொரு வழக்கும் தாக்கல் செய்யப்படாமல் பல வருடங்களா தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பாக நாங்கள் கவலையடைந்திருக்கிறோம்.

காணமல் போனோர் என்று அழைக்கப்படும் பலர் உத்தியோகப+ர்வமாக தடுத்து வைக்கப்படுவதை எதிர்த்தோரினால் உத்தியோகப+ர்வமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கு இதுவே தருணமாகும்.

மே 3 இல் வெசாக் வருகிறது. அந்தப் புனித நாளில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு நான் பரிந்துரைக்கின்றேன் என்று முதலமைச்ரச் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறையிலும் தடுத்து வைக்கப்படும் இருப்பவர்களில் தங்கயிருப்போரின் ஜீவனோபாயத்திற்கான திட்டமொன்றும் தேவைப்படுகிறது. இதுவொரு மனிதாபிமான நடவடிக்கையாகும். துரதிர்ஷ்டசாலிகளாக அவர்களின் சிலர் அதிக எண்ணிக்கையானவர்களாவர். அவர்கள் எம்மிடம் நிவாரணம் கேட்டு வருகின்றனர். அந்த மாதிரியான தேவைப்பாடுகளுக்கு நிதி வழங்க முடியாத நிலைமை எமக்குள்ளது.

யுத்தினால் உள, உடல் ரீதியாக பாதிக்கப்பட்டோர் தொடர்பாகவும் கவனம் செலுத் வேண்டிய தேவையள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.