செய்திகள்

கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்த இருவருக்கு அபராதம்

யாழ்.ஐந்துசந்திப் பகுதியில் கைத்தொலைபேசியில் ஆபாசப் படம் பார்த்த இரு இளைஞர்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்த யாழ்.நீதவான் இருவரையும் கடுமையாக எச்சரிக்கை செய்ததன் பின்னர் விடுவித்தார்.

ஐந்து சந்தியினை அண்மித்த பகுதியில் கடந்த திங்கட் கிழமை சந்தேகத்திற்கிடமான முறையில் கைத்தொலைபேசியினைப் பார்வையிட்ட 21 மற்றம் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரைப் பொலிஸார் கைது செய்திருந்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்த கைத்தொலைபேசியினைப் பறிமுதல் செய்து பார்வையிட்ட போது சந்தேகநபர்கள் ஆபாசப் படத்தினைப் பார்வையிட்டமை தெரியவந்தது. இருவரையும் நேற்று முன்தினம் 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.