செய்திகள்

கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உரியவரிடம் மீள ஒப்படைப்பதற்கு உடனடி நடவடிக்கை தேவை: சுரேஷ்

திருகோணலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் உள்ள பொதுமக்களின் காணிகளை அதன் சொந்தக்காரர்களிடம் ஒப்படைப்பதுடன் அவர்களை சகல உட்கட்டமைப்பு வசதிகளுடனும் மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்று யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் க.பிறேமச்சந்திரன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த சம்பூர் பகுதியில் சுமார் 4000 பேருக்குச் சொந்தமான ஏறத்தாழ 1100 ஏக்கர் காணிகளை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வித சட்டநடைமுறையும் பின்பற்றப்படாமல் அந்த காணிகளுக்குச் சொந்தமான மக்களை அப்புறப்படுத்தி உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் மகிந்த அரசு கையகப்படுத்தியது. ஆந்த ,டத்தில் ,ருந்த 8கோயில்கள், 6பாடசாலைகள், வைத்தியசாலை ஒன்று மற்றும் பொதுமக்களின் வீடுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. பின்னர் ,ந்த ,டம் சிறப்புப் பொருளாதார வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த ,டத்தில் ,ன்றுவரை எதுவித கட்டமைப்பும் மேற்கொள்ளப்படவில்லை. ,ந்த நிலம் முன்னால் ஜனாதிபதியின் பாரியார் சிறாந்தி ராஜபக்ச அவர்களின் நெருங்கிய உறவினர் தில்ஷான் விக்கிரமசிங்க அவர்களின் நிறுவனமான கேட்வே ,ன்டஸ்ரீசுக்குக் கையளிக்கப்ட்டது.

பொதுமக்களுக்குச் சொந்தமான காணியை முதலில் அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையிலும், பின்னர் விசேட பொருளாதார வலயம் என்ற போர்வையிலும் தனது குடும்ப உறவினருக்காகக் கபளீகரம் செய்தமையானது அரசு செய்த பாரிய குற்றமாகும்.

இன்றும் நான்கு முகாம்களில் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி, உலர் உணவுப்பொருட்களும் மறுக்கப்பட்ட நிலையில், ஏறத்தாழ பட்டினி நிலையில் அவர்களைக் கடந்த எட்டு ஆண்டுகளாக வைத்திருப்பது அவர்களைப் பட்டினிபோட்டுக் கொல்வதற்கு ஒப்பாகும். ,வ்வாறான பாரிய தவறுகளை புதிய அரசாங்கம் காலதாமதமின்றி நிவர்த்தி செய்ய வேண்டுமென்றும் அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் உள்வாங்கி அந்த மக்களின் காணிகளில் காணிக்குச் சொந்தக்காரர்கள் அனைவரையும் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளியில் தமிழ் மக்களுக்கு வாழ்வாதாரத்தைத் தரக்கூடிய சுமார் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட உப்பள நிலப்பரப்பை தென்னிலங்கையைச் சேர்ந்த றைகம உப்பளக் கம்பெனிக்கு முன்னைய அரசாங்கம் வாறிவழங்கி ,ருக்கின்றது. அங்கு குளோரின் தொழிற்சாலை உருவாக்குவதாகவும் மேலும் உப்புடன் தொடர்புபட்ட வேறு தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டபோதிலும் ,துவரை அங்கு எதுவித தொழிற்சாலைகளும் நிறுவப்படவில்லை. வெறுமனே தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உரித்தான காணிகள் சூறையாடப்பட்டு தென்னிலங்கை பணமுதலைகளுக்குத் தாரைவார்க்கப்படுகின்றது. அரசாங்கம் தனது நூறுநாள் வேலைத்திட்டத்தில் ,தனையும் கருத்தில் கொள்ள வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசாங்கத்தைக் கோருகிறது.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னால் அமைச்சரும் முன்னால் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் ஆலோசகருமான மிலிந்தமொரகொடவிற்குக் கையளிக்கப்பட்ட 30 ஏக்கர் காணியையும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.”

இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.