செய்திகள்

கையடக்கத் தொலைபேசியை திருடியவர் சி.சி.ரி.வி கமராவில் சிக்கினார் (படங்கள்)

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி அலிமூடுக்குவ பகுதியில் தொலைபேசிக் கடையில் இருந்த ஒரு கையடக்க தொலைபேசியை குறித்த நபர் ஒருவர் தனது பைக்குள் தெரியாமல் வைப்பதை அங்கிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் 24.03.2015 அன்று நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கையடக்க தொலைபேசி ஒன்று வாங்க வந்த நபர் ஒருவர் ஒரு 29000 ரூபா பெறுமதியான தொலைபேசி ஒன்று வாங்கியதன் பின் அவ்விடத்திலிருந்த 30000 ரூபா பெறுமதியான மற்றொரு தொலைபேசியை யாருக்கும் தெரியாமல் பேசிக்கொண்டே திருடி தனது பைக்குள் வைத்துள்ளார்.

எனினும் தொலைபேசியை திருடிய காட்சிகள் குறித்த கடையில் இருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

மேற்படி சந்தேக நபரை யாருக்காவது தெரியுமானால் உடனடியாக கண்டி பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு கண்டி பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.

Robbery (1)

Robbery (2)

Robbery (3)

Robbery (4)

Robbery (5)

Robbery (6)

Robbery (7)

Robbery (8)

Robbery (9)

Robbery (10)

Robbery (11)

Robbery (12)

Robbery (13)

Robbery (14)

Robbery (15)

Robbery (16)