செய்திகள்

கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வில் கல் வீச்சு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவா்களை பிரதம வேட்பாளராக தேர்தலில் ஈடுப்படுமாறு கோரி ஹற்றன் பஸ் தரிப்பிடத்தில் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதன்போது அதிகமானவா்கள் கையொப்பம் இட்டதை அவதானிக்க முடிந்தது.
மக்கள் கையொப்பம் இடும் போது இனந்தெரியாதவா்களால் கையொப்பம் இடும் இடத்திற்கு கல் எரியப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இன்றைய தினம் ஜக்கிய தேசிய கட்சிக்கு உறுப்பினா்கள் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட அக்கட்சியின் ஆதரவாளா்களே இக்கல்வீச்சில் ஈடுப்பட்டிருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினா் எலப்பிரிய நந்தராஜ் தெரிவித்தார்.

DSC08686

DSC08673

DSC08663