செய்திகள்

கைவிடப்பட்ட சர்வ்ராஸ் கதாநாயகனாகின்றார்- முழுமையான நம்பிக்கைகளுடன் பாக்கிஸ்தான்

2015 உலககிண்ண போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்துவதற்கு மாற்று வழிகளை தேடுவது போன்றதுதான் சவ்ராஸ் அஹமட்டின் கதையும், அணியால் இவர் தேற மாட்டார் என கைவிடப்பட்டார். மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நசீர் ஜம்செத் மோசமாக விளையாடவே பாக்கிஸ்தான் மாற்று வழியை தேட தொடங்கியது.

வேறு வழியின்றி அணியில் சேர்க்கப்பட்டார்.இன்று திடீரென அவர் அணியின் நம்பிக்கைநட்சத்திரமாக மாறியுள்ளார்.

Pakistan v Ireland - 2015 ICC Cricket World Cup
அணியில் சேர்ப்பதால் பலனளில்லை என கருதிய மிஸ்பா அவுஸ்திரேலிய, நியுசிலாந்து ஆடுகளங்களில் என்னசெய்வது என்றே தெரியாமல் திணறிக்கொண்டிருந்தவரை வேறு வழியின்றி மிஸ்பா தென்னாபிரிக்காவுடனான போட்டியில் இணைத்துக்கொண்டார்,அந்த போட்டியில் அவர் 49 ஓட்டங்களை பெற்றதுடன் ஆறு கட்ச்கiயும் பிடித்தார். தென்னாபிரிக்காவின் அதிர்ச்சித்தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.அதன் பின்னர் அயர்லாந்திற்கு எதிராக சதத்தை பெற்று பாக்கிஸ்தானின் அடுத்த சுற்றுவாய்ப்பை உறுதிசெய்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் மிஸ்பா அணியால் ஏன் சவ்ராசை பயன்படுத்த முடியாமலுள்ளது என்பதை மிகவும் கவலையுடன் வெளிப்படுத்தியிருந்தார். நியுசிலாந்துடனான போடடடிகளில் அவர் மோசமாக விளையாடியதும், ஏன் வலைப்பயிற்சிகளில் கூட அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை என அவ்வேளை மிஸ்பாகுறிப்பிட்டார்.

தற்போது சவ்ராஸ் குறித்த கேள்வி எழுப்பினால் மிஸ்பா முகத்தில் சிறிப்பு தென்படுகின்றது. நாங்கள் நியுசிலாந்திற்கு வந்ததும் அவரிற்கு வாய்ப்புகளை வழங்கினோம்,எனினும் இங்கு காணப்படும் சூழ்நிலைகளில் அவர் சற்று தடுமாறினார்,வலைப்பயிற்சிகளில் கூட தடுமாறினார்,இதன் காரணமாகவே நாங்கள் எங்கள் மனதை மாற்றினோம், அவரை எப்படி ஆரம்ப ஆட்டக்காராக ஆடவைப்பது என்பது குறித்து அச்சம் கொண்டிருந்தோம்.

எனினும் நசீர்ஜம்சத்தினால் சிறப்பாக விளையாட முடியாமல் போனதும் வேறுவழியின்றி நாங்கள் சவ்ராசை பயன்படுத்தினோம்,அவர் அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.என மிஸ்பா தெரிவித்துள்ளார்.

சவ்ராஸ் போன்று அணிக்கு திருப்தியை அளிக்க கூடிய இன்னொரு விடயம் வேகப்பந்து வீச்சாளர்கள், பாக்கிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆஸி அணியின் பந்துவீச்சாளர்கள் போன்று பிரபலமானவர்கள் அல்ல, எனினும் வேகம் மற்றும் பந்தை ஸ்விங் செய்வதில் ஆஸி அணியைபோன்ற திறமை கொண்டவர்கள்.அயர்லாந்துடனான போட்டியில் அவர்கள் ரிவேர்ஸ் ஸ்விங் வீசியதையும் காணமுடிந்தது.

நீங்கள் முதலில் பந்துவீசும்போது சிலவேளைகளில் ரிவேர்ஸ்சுவிங் கிடைக்கின்றது என மிஸ்பா தெரிவித்தார்.மாலைவேளைகளில் பந்து வீசுவது கடினமாகவுள்ளது.எனவும் அவர் குறிப்பிட்டார்.
உங்களுடைய பந்துவீச்சாளர்களுக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீச முடியுமா என்பதும் பந்தைஉயர எழும்ப செய்யமுடியுமா என்பதுமே முக்கியம்.எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்வரிசை பலப்படுத்தப்பட்டுள்ளதாலும், வேகப்பந்துவீச்சாளர்களில் முழுநம்பிக்கையுள்ளதாலும் பாக்கிஸ்தான் அவுஸ்திரேலியாவை குழப்பமற்ற மனதுடன் சந்திக்கின்றது. அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் எங்களுக்கு அழுத்தமில்லை, அவர்களுக்கே அழுத்தம் அதிகம், அவர்களே வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும் மற்றும் சொந்த மைதானத்தில் விளையாடுவதாலும் அவர்களுக்கே அழுத்தம் அதிகம் என மிஸ்பா குறிப்பிட்டார்.

ஓருநாள் போட்டிகளில் ஓரு சிறந்த இனிங்சும், ஓரு சிறந்த பந்துவீச்சும் போட்டியின் போக்கை மாற்றுவதற்கு போதுமானது.எங்களிடம் அதற்கான வீரர்கள் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.