செய்திகள்

கைவிரல் அடையாளத்துடன் இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகிக்க தீர்மானம்

இனி வரும் காலத்தில் இலத்திரனியல் அடையாள அட்டையை விநியோகிப்பதற்கும் அதில் கைவிரல் அடையாளம் மற்றும் ஆளின் உயிரியல் தகவல்களை உள்ளடக்கும் வகையில் ஆட்பதிவு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் கிருஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரத்துங்க அமைச்சரவையில் முன்வைத்த யொசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.
இதன்படி தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் போது கைவிரல் அடையாளம் உள்ளிட்ட ஆளின் உயிரியல் தகவல்கள்; உள்ளடக்கியதாக இலத்திரனியல் அடையாள அட்டையை விநியோகிக்க 1968/32ம் இலக்க சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு தேவையான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அதனை வர்த்தமானியுடாக வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Print