செய்திகள்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர சிவராத்திரி உற்சவத்தில் ஜப்பான் நாட்டு மாணவர்கள்

சிவராத்திரி தினத்னறு இலங்கையின் தான்தோறீச்சரங்களில் ஒன்றான மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரத்தில் ஜப்பான் நாட்டில் இருந்து வருகைதந்துள்ள பெருமளவான இளைஞர் யுவதிகளும் சிவராத்திரி தின நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

உலகளாவிய இளைஞர் தலைமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சிதிட்டத்துக்கு அமைய, புரிந்துணர்வு மற்றும் மனிதநேய நடைமுறைகளை ஊக்குவிக்கும் உலகளாவிய சுற்றுலாவின் ஒரு அங்கமாக இலங்கை வந்த ஜப்பான் மாணவர்களே இந்த உறசவத்தில் கலந்துகொண்டு கலாசார பரிமாற்றங்களை செய்துகொண்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் கே.தவராஜாவின் மேற்பார்வையின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வாழிகாட்டலுடன் மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த கலாசார பரிமாற்றுத்திட்டத்தின் கீழ் இவர்கள் தான்தோன்றீஸ்வரத்துக்கு வருகைதந்தனர்.

ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட இவர்கள் அங்கிருந்த மக்களுடனும் கலந்துரையாடி பிரசாதம் உண்டு மகிழ்ந்தனர்.

DSC08828 DSC08834 DSC08846 DSC08852 IMG_0022 IMG_0026 IMG_0027 IMG_0049 IMG_0051 IMG_0058 IMG_0063 IMG_0065