செய்திகள்

கொடுப்பனவினை வழங்குவதற்கான நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளிகளில் இதுவரையில் எந்தவொரு கொடுப்பனவையையும் பெறாதவர்களுக்கான இம்மாதம் (ஏப்ரல்) முதல் கொடுப்பனவினை வழங்குவதற்கான நடவடிக்கையினை கிழக்கு மாகாண சபை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு குறித்து நான்கு தடவைகள் கிழக்கு மாகாணசபையில் தன்னால் பிரேரணை முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களில் பலர் இதுவரையில் கொடுப்பனவுகள் எதுவும் இன்றியே தமது கடமைகளையாற்றிவந்தனர்.

இவர்களுக்கு எதாவது கொடுப்பனவு வழங்கவேண்டும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும் பாலர் பாடசாலை பணியகம் என்பன பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

இந்த நிலையில் தற்போது கிழக்கு மாகாணசபையில் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றும் இதுவரையில் எந்தவித கொடுப்பனவினையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபா வீதம் கொடுப்பனவினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்த வருடம் தைமாதம் தொடக்கம் வரையான நிலுவைகளுடன் சேர்ந்த இந்த சம்பளம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த N|வதனக்கொடுப்பனவு இந்த மாதம் தொடக்கம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான தீர்மானம் கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் அதன் செயற்பாடுகள் மந்த கதியிலேயே நடைபெற்றுவந்தது.

இந்த நிலையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பான ஆவணத்தில் ஆளுனர் கையெழுத்திட்டுள்ளதாக அறிகின்றேன்.அதன் காரணமாக விரைவில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

n10