செய்திகள்

கொட்டகலை நகருக்கு அருகே நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில்வே கடவை தொடர்பில் குற்றச்சாட்டு (வீடியோ, படங்கள்)

கொட்டகலை நகரத்திற்கு அண்மித்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில்வே கடவை, ரயில்வே திணைக்களம் இலாபம் பெற்றுக்கொள்ளும் கடவையாக மாற்றயமைக்கப்பட்டுள்ளதாக அவ்வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 ஹற்றன் முதல் நுவரெலியாவிற்கு செல்லும் வாகனங்கள் ரயில்வே கடவையின் ஊடாக செல்வதுடன்,

குறித்த ரயில்வே கடவை சமிக்ஞையாளர்களினால் மூடப்படுவதன் காரணமாக வாகனங்கள் ரயில்வே கடவையுடன் மோதியதால் ஏற்பட்ட நட்டத்திற்காக ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரிக்கு 25 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது.

இதுவரையில் 10ற்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்விபத்துக்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக திம்புள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தண்டப்பணம் செலுத்தாதோருக்கு நீதிமன்றத்தின் முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்ய ரயில்வே திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெறப்படும் பணத்திலிருந்து சாரதிகளினால் ரயில்வே கடவை முழுமையாக பொறுத்தப்பட்ட போதிலும்,

பெற்றுக்கொள்ளப்படும் பணத்திலிருந்து பகுதியளவில் அல்லது நட்டம் ஏற்பட்ட பகுதி மாத்திரம் புதுப்பிக்கப்படுவதற்கு ரயில்வே திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் குறித்த வீதியினூடாக வாகனங்கள் பயணிக்கும் போது ஒரே தடவையில் ரயில்வே கடவையை மூடிவிடுவதினால் இவ்விபத்து இடம்பெறுவதாகவும் அதை எதிர்கொண்ட வாகன சாரதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ரயில் கடவையினை கடக்கும் போது எவ்வித அடையாளங்களும் காணப்படாமையினால் தங்களுக்கு தண்டப்பணம் செலுத்த வேண்டி ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளதாக இவ்வாறான சம்பவங்களுக்கு முகம் கொடுத்த சாரதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் கொட்டக்கலை 111 மையில் கல் அருகில் உள்ள ரயில் சமிக்ஞை பொருத்துவது தொடர்பில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஒரு கோபுர பாதை சமிக்ஞையில் மாறாக எதிர்பக்கத்தில் காணப்படுவதனால் ஹட்டனில் இருந்து நுவரெலியா வரையிலான ரயில் பாதையினை கடந்து செல்லும் சாரதிகள் இதனை விட அதிகமான விபத்துக்களுக்கு முகம்கொடுக்க நேரிடும்.

இது தொடர்பில் கொட்டகலை ரயில்வே திணைக்கள பொறுப்பதிகாரியிடம் வினவுவதற்காக நாம் அங்கு சென்ற போது ஊடகங்களுக்கு தன்னால் கருத்து தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

அத்துடன் ரயில்வே திணைக்கள சட்டத்திட்டங்களுக்கமைய ரயில்வே கடவைக்கு ஏற்படும் நட்டத்தை சாரதிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=XsywczeHGUU&feature=youtu.be” width=”500″ height=”300″]

DSC09061 DSC09063 DSC09089 DSC09092 DSC09094 DSC09534