செய்திகள்

கொட்டகெத்தன கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விடுதலை

2012 ஆம் ஆண்டு கஹவத்தை, கொட்டகெத்தன பகுதியில் தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் மூவரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்து, விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

போதிய ஆதாரங்கள் இல்லையென நீதிபதி தெரிவித்தார் அதன்பின்னர் சந்தேக நபர்கள் வ்விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கபடவில்லை அவர்களை கண்டுபிடிப்பதோடு, எமது விடுதலையை அனைத்து ஊடகங்களும் பிரசுரிக்கவேண்டுமென விடுதலையடைந்தவர்கள் கேட்டுக் கொண்டனர்.