செய்திகள்

கொட்டகேதெனவில் பெண்ணொருவரை காணவில்லை.

கஹவத்தை கொட்டகேதென பகுதியில் வீடொன்றிலிருந்து 39 வயதுடைய பெண்ணொருவர் காணாமல் போயுள்ள நிலையில் குறித்த வீட்டில் இரத்தக் கறைகள் காணப்படுவதால் பிரதேச மக்கள் மத்தியில் பதற்ற நிலைமையேற்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2மணிமுதல் இந்த பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் பெண்ணை தேடி பிரதேசத்தில் தேடுதல்களை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

இந்நிலையில் குறித்த வீட்டில் பல இடங்களில் இரத்தக் கறைகள் காணப்பட்டதால் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் மத்தியில் பதற்ற நிலைமையேற்பட்டு;ள்ளதாக தெரிய வருகின்றது.

கஹவத்தை பகுதியில் கடந்த சில வருடங்களாக பெண்கள் பலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.