செய்திகள்

”கொண்டயா”வை தேடி பெம்முல்லையில் தீவிர தேடுதல் : பொலிஸாரிடம் சிக்காது தலை மறைவு

ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியொருவரின் வீட்டு காணிக்குள் நுளைந்து முறையற்ற வகையில் நடந்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக ”கொண்டயா” எனப்படும் துனேஷ் பிரியந்தவை தேடி பொலிஸார் பெம்முல்லை பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும் கொண்டயா தொடர்பாக எந்த தகவலும் நேற்று வரை பொலிஸாருக்கு கிடைத்திருக்கவில்லை. இந்நிலையில் இவர் அந்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொட்டதெனியாவ சேயாவின் கொலை சம்பவம் தொடர்பாக முதலில் கொண்டயா என்றழைக்கப்படும் நபரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்ததுடன் பின்னர் அவரின் சகோதரரே அந்த சம்பத்தில் தொடர்பு பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதன்படி அவரின் சகோதரருக்கு நீதிமன்றத்தினால் மரணண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சகோதரருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு சில தினங்களில் கொண்டயா தனது பிரதேசத்தில் காணியொன்றுக்குள் புகுந்து நிர்வாணமாக முறையற்ற வகையில் நடந்துக்கொண்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இதன்படி அவரை தேடி சில நாட்களாக தீவிர தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
n10