செய்திகள்

கொபானி ஐஎஸ்ஐஎஸ் பிடியிலிருந்து விடுவிக்கப்படுகின்றது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிடியிலிருந்த கொபனியின் பெரும்பகுதியை குர்திஸ் போராளிகள்கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக்கின் பெஷ்மெர்கா படையணியுடன் இணைந்து கொபானியின் பெரும் பகுதியை குர்திஸ் போராளிகள் கைப்பற்றியுள்ளதாக சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியை கைப்பற்றியிருந்தனர்.
எனினும் பின்னர் அமெரிக்க விமானத்தாக்குதல்களின் உதவியுடன் குர்திஸ் போராளிகள் அவர்களை பின்வாங்கச்செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கடும் மோதலிற்கு பின்னர் கொபானியின் முக்கிய பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதை மக்கள் பாதுகாப்பு பிரிவு என்ற குர்திஸ் அமைப்பு உறுதிசெய்துள்ளது. அடுத்த சில நாட்களில் முழு நகரத்தையும் கைப்பற்றிவிடுவோம் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.