செய்திகள்

கொம்பனித்தெரு பகுதியில் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கொழும்பு கொம்பனித்தெரு பகுதி பஸ்தரிப்பிடமொன்றில் தாக்கப்பட்;டு கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கிடையேயான வாய்த் தர்க்கம் முற்றிய நிலையில் மற்றையவரின் தாக்குதலுக்கு இலக்காகி இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே பிரதேசத்தை சேர்ந்த 30 வயது நபரொருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும். இது தொடர்பாக 45 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.