செய்திகள்

கொரோனாவால் திணறும் உலகம் – உயிரிழப்பு உயர்வால் ஊரடங்கு நீட்டிப்பு

உலகளவில், கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை, 8.50 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில், ஐரோப்பா, அதிகமான மனித உயிர்களை இழந்து, முதலிடத்தில் உள்ளது. இத்தாலியில், கடந்த, 24 மணி நேரத்தில், 837 பேர் இறந்துள்ளனர். இந்நாடு, 12 ஆயிரத்து, 428 பேரை இழந்துள்ளது. கொரோனாவை அடியோடு ஒழிக்கும் நோக்கில், இத்தாலி, மூன்று வார ஊரடங்கு முடியும் நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்துள்ளது.ஐரோப்பாவைச் சேர்ந்த, ஸ்பெயின் நாட்டில், நேற்று(மார்ச் 31) ஒரே நாளில், 748 பேர் பலியாயினர். இங்கும், 12ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில், மார்ச், 16 முதல், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

அதுபோல, ஐரோப்பாவைச் சேர்ந்த, கிரீஸ், சைப்ரஸ் நாடுகளும், மக்கள் வெளியே வர புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கிரீஸ், ஊரடங்கு உத்தரவை, வரும், 11ம் தேதி வரை நீட்டித்து உள்ளது. சைப்ரஸ் அரசு, இரவு, 9:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில், ஊரடங்கு உத்தரவு, வரும், 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், மக்கள் வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.gallerye_051300718_2513215

பிரான்ஸ் அரசு, ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்துள்ளது. இங்கு, நேரக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. ஒருவர், வெளியே வந்து, பொருட்கள் வாங்க, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.ரஷ்யாவில், கொரோனா பாதித்த, 2,337 பேரில், 17 பேர் பலியாகி உள்ளனர். எனினும், அனைத்து எல்லைகளையும் மூடியுள்ள ரஷ்யா, தலைநகர் மாஸ்கோவில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விழி பிதுங்கும் அமெரிக்கா

வல்லரசு நாடான, அமெரிக்கா, கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி, மீள வழி தெரியாமல் தவிக்கிறது. உலகிலேயே, கொரோனா வைரஸ் பாதிப்பு இங்கு தான் அதிகம். 1.87 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இறப்பு எண்ணிக்கை, 3 ஆயிரத்து 850 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்க அரசு, ஏப்., 30 வரை மக்கள் தனித்திருக்க, ‘சமூக விலக்கல்’ உத்தரவு பிறப்பித்துள்ளது.(15)