செய்திகள்

கொரோனாவின் கோரப்பிடியில் இத்தாலி – ஒரே நாளில் 889 பேர் – 10 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது.உலகம் முழுவதும் 199 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 6 லட்சத்து 50 ஆயிரத்து 929 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 30 ஆயிரத்து 299 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் 92 ஆயிரத்து 472 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 889 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது.(15)