செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான போர் – சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர்

கொரோனா வைரஸ் தாக்குதலின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.அமெரிக்காவில் இதுவரை 2,10,714 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 4,697 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், வைரசுக்கு எதிராக போராடும் பணியாளர்களின் சேவையை போற்றும் வகையில், அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டடமான எம்பயர் ஸ்டேட் பில்டிங், ஆம்புலன்ஸ் சைரனை போல ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கட்டான சூழ்நிலையில், பணியாற்றும் அனைத்து அவசரகால பணியாளர்களையும் பாராட்டுவதற்காக, ஆம்புலன்ஸ் சைரனை போல ஒளிரும் சிவப்பு மற்றும் வெள்ளை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிரான போர் முடியும் வரை, முழுவதும் எம்பயர் பில்டிங் விளக்குகள் இதுபோலவே எரியும் என்றும் கூறப்பட்டுள்ளது.(15)