செய்திகள்

கொரோனாவுக்கு ஐரோப்பிய கண்டத்தில் 1 லட்சம் பேர் உயிரிழப்பு

மனித குலத்துக்கு பெரும் சவாலாக விளங்கும் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்தது. நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 505 பேர் உயிரிழந்தனர். அதே போல் மேலும் புதிதாக 81 ஆயிரம் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 23 லட்சத்து 30 ஆயிரமாக உயர்ந்தது.சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பின்னர் ஐரோப்பிய கண்டத்தில் வேகமாக பரவியது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய கண்டத்தில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. அதே போல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 10 லட்சத்தை கடந்துள்ளது.அந்த கண்டத்தில் தொடக்கத்தில் இத்தாலியில் உள்ள வடபிராந்திய பகுதியில் கொரோனா கண்டறியப்பட்டது. சீனாவில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மூலம் மற்றும் , சீனாவுக்கு சென்று வந்தவர்களாலும் வைரஸ் பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வடக்கு பிராந்தியத்தில் உள்ள 10 நகரங்களுக்கு சீல் வைத்து பொதுமக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் சில நாட்களில் இத்தாலி முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது.வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் பயன் அளிக்கவில்லை. அங்கு கொத்து கொத்தாக மக்கள் பலியானார்கள். அதன்பின் மற்ற ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் அதன் தாக்கத்தை காட்ட தொடங்கியது.202004191538240731_1_d4ljlcib._L_styvpf

சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தற்போது உச்சத்தில் உள்ளது. வைரசை கட்டுப்படுத்த ஐரோப்பியாவில் உள்ள பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.தற்போது இத்தாலி, ஸ்பெயினில் தினமும் பலியாகுபவர்கள், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேவேளையில் இங்கிலாந்து, பிரான்சில் பலி எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது.இதே போல் மற்ற நாடுகளிலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது.ஆசிய கண்டத்தில் 14 ஆயிரம் பேரும், வட அமெரிக்க கண்டத்தில் 41 ஆயிரம் பேரும், தென் அமெரிக்க கண்டத்தில் 3,600 பேரும், ஆப்பிரிக்க கண்டத் தில் 1,082 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 1,862 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 29 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்பட்டதால் அதன் எண்ணிக்கை 7 லட்சத்து 38 ஆயிரமாக உயர்ந்தது. அமெரிக்காவில் இதுவரை 13 ஆயிரம் பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அந்த நாட்டில் நியூயார்க் மாகாணம்தான் அதிக பாதிப்பை சந்தித்து இருக்கிறது. அங்கு 17 ஆயிரத்து 670 பேர் பலியாகியும், 2 லட்சத்து 41 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். அங்கு சில நாட்களுக்கு முன்பு தினமும் 800 பேர் வரை உயிரிழந்து வந்தனர். இந்த நிலையில் நியூயார்க்கில் நேற்று 540 பேர் பலியாகி உள்ளனர். கிட்டதட்ட 2 வாரங்களுக்கு தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது.202004191538240731_2_mzbkz9fu._L_styvpf

இத்தாலியில் கொரோனா பலி 23 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. நேற்று 482 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 637 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா வைரசுக்கு பலி எண்ணக்கையில் 20 ஆயிரத்தை கடந்த 3-வது நாடாக ஸ்பெயின் உள்ளது. அங்கு 1 லட்சத்து 94 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பிரான்சிலும் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அங்கு 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் நேற்று கொரோனாவுக்கு மேலும் 888 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்து 400 ஆக உயர்ந்தது. அங்கு இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட் டுள்ளனர்.

சீனாவில் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. மேலும் புதிதாக 27 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 4,632 பேர் பலியாகியும் 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.ரஷியாவில் தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. அங்கு 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 313 பேர் பலியாகி இருக்கிறார்கள்.பெல்ஜியத்தில் 5 ஆயிரத்து 453 பேரும், ஜெர்மனியில் 4,538 பேரும், ஈரானில் 5,031 பேரும், நெதர்லாந்தில் 3,600 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,368 பேரும், பிரேசிலில் 2,368 பேரும், கனடாவில் 1,470 பேரும், சுவீடனில் 1,511 பேரும், துருக்கியில் 1,890 பேரும் பலியாகி உள்ளனர்.(15)