செய்திகள்

கொரோனா! அச்சத்தின் உச்சத்தை நாடு கடந்துவிட்டது : சுகாதார சேவை பணிப்பாளர்

புதிதாக அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்தே கண்டுபிடிக்கப்படுகின்றனர். இதன்படி நாங்கள் சமூகத்திற்குள் பரவும் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு வருகின்றோம். என சுகாதார சேவை பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றிலேயே அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினத்தில் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் பலாலி தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாகும். அதேவேளை கிளிநொச்சி பகுதியிலுள்ள தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்த சுதுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 4 பேரும் மற்றையவர்கள் பேருவலை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.
இந்த சமூகத்தில் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தும் நிலையத்திலேயே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 நாட்களில் கண்டு பிடிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்தவர்களே. இவர்களின் வைரஸ் அளவும் குறைவாகவும் இருக்கின்றது. இவர்களின் மூலம் பரவுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவுடன் இதனை கட்டுப்படுத்த முடியுமாக இருக்கின்றது. சமுகத்திற்குள் சென்றாலே இது பாதிப்பாகும். ஆனால் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாங்கள் புரிந்துகொள்ளும் வகையில் எச்சரிக்கையின் உச்ச மட்டத்தை தாண்டியே நாங்கள் வந்துள்ளோம். இதனை கட்டுபடுத்தியுள்ளோம். சமூக இடைவெளியை தொடர்ந்தும் பேணுவது அத்தியவசியமாகும். ஊரடங்கு சட்டத்திற்கு கட்டுப்பாடுகள் இலகுவானது. ஊரடங்கு சட்டத்தை நீக்கிய பின்னர் இது தொடர்பாக தீர்மானம் எடுப்பது கடினமானது. மிகவும் கடுமையாக சில விடயங்களை செயற்படுத்த வேண்டியுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார். -(3)