செய்திகள்

கொரோனா! அவதானம் மிக்க காலத்தில் இலங்கை : சமூக இடைவெளியை பேணி தொற்றிலிருந்து தப்பிப்போம்

கொரோனா வைரஸ் தொடர்பால இலங்கை அவதானம் மிக்க காலத்திற்குள் நுழைந்துள்ளது.
இனி வரும் நாட்கள் அபாயம் மிக்க நாட்களாக இருக்குமெ அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சமூக இடைவெளிகளை பேணுவதன் மூலமே அந்த தொற்றிலிருந்து தப்பிக்க முடியுமென அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இது வரை காலம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவிய தொற்று பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு பரவி தற்போது அவர்களின் உறவினர்கள் ஊடாக பொது மக்களுக்கு பரவும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களில் அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் உறவினர்களாவே இருக்கின்றனர். இதனால் இந்த தொற்று ஒருவரில் இருந்து ஒருவருக்கு தொற்றும் ஆபத்து நிலவுவதால் முடிந்தளவுக்கு சமூக இடைவெளியை பேணுவதுடன் வீட்டை விட்டு வெளியேறுவதையும் தவிர்க்குமாறு அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். -(3)