செய்திகள்

கொரோனா! இலங்கை கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

இலங்கை கடல் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு கடற்படையினர் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வரும் நிலையிலேயே இலங்கை கடல் எல்லைகளின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவிலிருந்து வரும் மீனவர்கள் இலங்கைக்குள் நுழையலாம் என்ற காரணத்தினால் கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாக இலங்கை கடற்படை தளபதி தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையினரும் தமது கடற்பரப்பில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-(3)