செய்திகள்

கொரோனா! உயிரிழப்பு 70,000த்தை தாண்டியது : இந்தியாவிலும் ஆபத்து தீவிரம்

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் பூராகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70,000த்தை தாண்டியுள்ளது.
இதன்படி உலகம் பூராகவும் 200 வரையான நாடுகளில் 70,356 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12,86,409 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இது வரையில் அதிகமான உயிரிழப்புகள் இத்தாலியிலேயே பதிவாகியுள்ளது. அந்த நாட்டில் 15,887 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஸ்பெயினில் 13,055 பேரும் , அமெரிக்காவில் 9,648 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. அங்கு 109 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4067 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 34 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளனர். -(3)