செய்திகள்

கொரோனா ஒழிப்பிற்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு கிராம உத்தியோகத்தர்கள் கோரிக்கை

கொரோனா ஒழிப்பிற்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யாவிடின், எதிர்வரும் வாரம் தொடக்கம் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையிலிருந்து விலகவுள்ளதாகவும் இலங்கை ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் கமல் கித்சிறி தெரிவித்துள்ளார்.கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபடும் கிராம உத்தியோகத்தர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இதன் காரணமாக அச்சுறுத்தலுக்கு மத்தியில் பணியாற்ற வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.(15)