செய்திகள்

கொரோனா! களுபோவில , நீர்கொழும்பில் வார்ட்டுகளுக்கு பூட்டு : வைத்தியர்கள் , சுகாதார பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரொருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து களுபோவில போதனா வைத்தியசாலையின் 5ஆம் இலக்க வார்ட் நேற்று இரவு முதல் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை அந்த வார்ட்டில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளர்கள் 15பேரும் மற்றும் அங்கு பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட 20 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த வார்ட்டில் சிகிச்சைப் பெற்று வந்த 15 நோயாளர்களும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் அங்கிருந்த சுகாதார பணியாளர்கள் களுபோவில வைத்தியசாலையின் விசேட அறையொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தெஹிவளை நெதிமாலை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறாக கொரொனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நேற்று மாலை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இதேவேளை நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்த கொரோனா தொற்றாளர் காரணமாக அந்த வைத்தியசாலையின் வார்ட்டு ஒன்றும் மூடப்பட்டுள்ளதுடன் வைத்தியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 50 பேர் வரையிலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நபர் கடந்த 11ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தவர் என தெரியவந்துள்ளது. நீர்கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர் வைத்தியர்களுக்கு தகவல்களை மறைத்துள்ளதாக கூறப்படுகின்றது. -(3)