செய்திகள்

கொரோனா சந்தேகத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழப்பு

காெரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய அவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு காெரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் வீசிங் நோயாளி என்பதுடன் கடந்த மூன்று நாட்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டநிலையில் அவர் உயிரிழந்தார்.(15)