செய்திகள்

கொரோனா – தகவல்களை மறைக்க வேண்டாம்! மக்களை கேட்கும் சுகாதார பிரிவினர்

கொரோனா ரைவரஸ் தொற்றுக்கு உள்ளாகும் சிலர் அது தொடர்பான தகவல்களை மறைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.
நோய் அறிகுறிகள் தென்படுகின்ற போதும் அது தொடர்பான தகவல்களை மறைப்பதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் தகவல்களை மறைக்காது உண்மைகளை கூறுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அவ்வாறு தகவல்களை மறைப்பதால் வீட்டில் உள்ளோருக்கும் , பிள்ளைகளுக்கும் மற்றும் உறவினர்களுக்குமே பாதிப்பை ஏற்படுத்துமெனவும் இதனால் இது குறித்து கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக சிலர் வைத்தியசாலைகளுக்கு தகவல்களை மறைத்து வருவதாகவும் பின்னர் அவர்கள் கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்படும் போது சுகாதார துறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டு அவர்களையும் தனிமைப்படுத்தும் நிலைமை உருவாகுவதாகவும் இவ்வாறாக அண்மையில் மஹரகம வைத்தியசாலைக்கு வந்த ஒருவரால் நான்கு வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலையின் 14 ஊழியர்களை தனிமைப்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -(3)