செய்திகள்

”கொரோனா தடுப்பூசி மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் என்ற தகவல்களில் உண்மையில்லை” – என்கிறார் பேராசிரியர் நீலிகா மலவிகே

கொரோனா தடுப்பூசி மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் என்று சமூகவலைத்தளங்களில் பரவும் தகவல்களில் உண்மையில் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

தடுப்பூசிகள் தொடர்பாக தொடர்ந்தும் ஆய்வு செய்து வருவதாகவும், ஆனால் அதனால் பக்க விளைவுகள் ஏற்படுமென்று இதுவரையில் தெரியவரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி பெற்றுக்கொண்ட சுமார் 2,000 சுகாதார ஊழியர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதித்த போதும் அவற்றில் பாதிப்புகள் இருப்பதாக தெரியவில்லை எனவும் இதனால் தடுப்பூசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். -(3)