செய்திகள்

கொரோனா தொற்று! மூன்றாவது உயிரிழப்பு தொடர்பாக சுகாதார பணிப்பாளரின் விளக்கம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மூன்றாவது மரணம் நேற்று (01) இடம்பெற்ற நிலையில் அது தொடர்பாக சுகாதார சேவை பணிப்பாளர் அணில் ஜாசிங்க விளக்கமளித்தள்ளார்.
73 வயதுடைய மருதானை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறாக உயிரிழந்திருந்தார்.
இவர் சிறிஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினமே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவ பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவர் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்படும் போது ஆபத்தான நிலையிலேயே இருந்துள்ளார். இந்த நபர் நீரிழிவு , உயர் குருதியமுக்கம் , நீண்டகால சிறுநீரக பிரச்சினை உள்ளிட்ட நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தவர் என தெரிய வந்துள்ளது. -(3)