செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக பல இடங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன.இவ்வாறான போலியான தகவல்களினால் பதற்றமான சூழ்நிலை மக்களிடத்தில் ஏற்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை போலியான தகவல்களை பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.(15)