செய்திகள்

கொரோனா! 6 பேர் ஜா-எல ஆட்டோ சாரதியின் நண்பர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக நேற்றைய தினம் இரவு அடையாளம் காணப்பட்ட 7 பேர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறாக அடையாளம் காணப்பட்டவர்களில் 6 பேர் நீர்கொழும்பு மற்றும் ஜா-எல சுதுவெல்ல பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் 6 பேரும் அண்மையில் ஜா-எல பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஆட்டோ சாரதியுடன் தொடர்புகளை பேணியவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த ஆட்டோ சாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான பின்னர் அவருடன் தொடர்புகளை பேணிய 28 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பதுடன் அண்மையில் போதைப் பொருளை தேடி பிரதேசத்தில் இவர்கள் சுற்றித் திரிந்துள்ளதாக கூறப்படுகின்றது. சுகாதார துறையினர் இவர்களை தேடும் போது இவர்கள் தலைமறைவாகியிருந்தனர். எவவாறாயினும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு ஒலுவில் தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகிளு;ளது.
இதேவேளை மற்றைய நபர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)