செய்திகள்

கொலை மற்றும் திடீர் விபத்துக்களால் 4 நாட்களில் 43 பேர் உயிரிழப்பு

கடந்த 11ம் திகதி இரவு முதல் நேற்று 16ம் திகதி காலை வரையான 4 நாட்களுக்குள் நாட்டில் இடம்பெற்ற கொலைகள் மற்றும்; வாகன விபத்துக்கள் உள்ளி;ட்ட பல்வேறு சம்பவங்களில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறாக தக்குதல்கள் உள்ளிட்ட 13 சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 வாகன விபத்துக்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் பாட்டாசுகளால் ஏற்பட்ட விபத்துக்கள் கடந்த வருடத்திலும் பார்க்க இந்த வருடத்தில் குறைவடைந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.