செய்திகள்

கொல்கத்தா அணிக்கு பின்னடைவு: வேகப்பந்து வீச்சாளர் ஹாஸ்டிங்ஸ் காயத்தால் விலகல்

தற்போது நடைப்பெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக இரண்டு போட்டிகளில் ஹாஸ்டிங்ஸ் விளையாடினார். டெல்லி அணிக்கு எதிராக 6 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் மும்பை போட்டியின் போது முழங்காலில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார். இது கொல்கத்தா அணியின் சமநிலையை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

ஜான் ஹாஸ்டிங்ஸ்-க்கு பதிலாக புதிய வீரரை அணியில் சேர்க்க ஐ.பி.எல். தொழில்நுட்ப குழுவிடம் கொல்கத்தா அணி நிர்வாகம் அனுமதி கோரியுள்ளது.