செய்திகள்

கொல்கத்தா மேம்பாலத்தை கட்டிவந்த நிறுவனத்தின் மீது கொலை வழக்கு

இந்தியாவின் கொல்கத்தா நகரில் நேற்று வியாழக்கிழமை குறைந்தது 24 பேர் பலியாவதற்கு காரணமாக இடிந்துவிழுந்த மேம்பாலத்தை கட்டிவந்த நிறுவனத்தின் மீது காவல்துறையினர் கொலை வழக்கு (culpable homicide-நோக்கத்துடனோ அல்லது நோக்கமின்றியோ செய்யப்படும் கொலை) விசாரணையை துவங்கியுள்ளனர்.

அந்த நிறுவனத்தின் 5 அதிகாரிகள் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் ஹைதராபாத்தில் உள்ள அதன் தலைமையகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

குறித்த நெடுஞ்சாலையை ஒன்றரை ஆண்டுகளுக்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு 7 ஆண்டுகள் எடுத்துள்ளன.

இடிந்துவிழுந்த பாலத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்காக, மீட்புப் பணியாளர்கள் பெரும் இயந்திரங்களைப் பயன்படுத்தி இரவு முழுவதும் முயன்றுவந்தார்கள்.

இனிமேலும் எவரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்று இப்போது அவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்தனர்.

n10