செய்திகள்

கொல்கொத்தா அணி அபார வெற்றி

மொஹாலியில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கட் போட்டியில், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியை 6 விக்கட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

முன்னதாக பேட் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில், 8 விக்கட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கொத்தா அணி, 17.1 ஓவர்களிலேயே, 4 விக்கட் மட்டும் இழந்து, இலக்கை அனாயாசமாக எட்டியது. கொல்கொத்தா அணிக்கு, ராபின் ஊத்தப்பா, 28 பந்துகளில் 53 ரன்கள் விளாசி, அணியின் வெற்றியை எளிதாக்கினார்.