செய்திகள்

கொள்கைக்காக ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் வசந்திதேவி!

ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்ட வசந்தி தேவி, கொள்கைக்காக அவரை எதிர்த்து போட்டியிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர்கள் தண்டையார்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெள்ளத்தின் போது ஜெயலலிதா நடந்து கொண்டதை போல் வேறு எந்த மாநில முதல்வரும் நடந்து கொண்டது இல்லை என்றார்.

அதிமுகவின் அடிமை கலாச்சாரம் பிரச்சார மேடைகளில் கூட தெரிவதாக தெரிவித்தார். பின்னர் பேசிய ஆர்.கே.நகர் தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் வசந்தி தேவி லோக் ஆயுக்தா நிறுவபடும் என தற்போது தேர்தல் அறிக்கையில்

சொல்பவர்கள் கடந்த காலங்களில் ஏன் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை? என கேள்வி எழுப்பினர்.

N5