செய்திகள்

கொழுந்து பறிக்க சென்ற பெண் மீது மரக்கிளை முறிந்து விழுந்து படுகாயம்

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கடும் மழையினால் தோட்ட தொழிலாளிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த  நிலையில் இன்று காலை பெய்த காற்றுடன் கூடிய கடும் மழையினால் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை தோட்டத்தில் தொழிலுக்காக காலை 7.30 மணியளவில் கொழுந்து பறிக்க சென்ற பெண் ஒருவரின் மீது மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் சம்மந்தப்பட்ட தொழிலாளி படுங்காயங்களுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர் வள்ளியம்மா வயது 49 என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.