செய்திகள்

கொழும்பிலும் , புத்தளத்திலும் அதிகமான நோயாளிகள் : விபரங்கள் உள்ளே

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரில் அதிகமானவர்கள் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது வரையில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்ட 180 பேரில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 44 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக புத்தளம் மாவட்டத்தில் 25 பேரும் , களுத்துறை மாவட்டத்தில் 26 பேரும் , கம்பஹா மாவட்டத்தில் 13 பேரும் , கண்டி மாவட்டத்தில் 7 பேரும் , யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 பேரும் , இரத்தினப்புரி மாவட்டத்தில் 3 பேரும் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் 3 பேரும் ,மாத்தறை மாவட்டத்தில் 2 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காலி , கேகாலை , மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை தனிமைப்படுத்தும் நிலையங்களில் 37 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். -(3)

பாத[gview file=”http://www.samakalam.com/wp-content/uploads/2020/04/sitrep-sl-en-07-04_10.pdf”]