செய்திகள்

கொழும்பில் இன்று யுத்த வெற்றி நிகழ்வை கொண்டாட இன்று தயாராகும் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று  கொழும்பில் யுத்த வெற்றி நிகழ்வொன்று நடத்தப்படவுள்ளது.
மஹிந்தவுக்கு ஈதரவான அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வு இன்று மாலை 5 மணியளவில் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஜனாதிபதி மைததிரிபால சிறிசேன தலைமையில் நாளை மாத்தறை நகரில் பிரிவினைவாதத்தை தோற்கடித்த தினமாக குறித்த தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.