செய்திகள்

கொழும்பில் கடத்தப்பட்ட 28 தமிழ் இளைஞர்கள் எங்கே? கடற்படை தொடர்பு குறித்தும் விசாரணை

கொழும்பு மற்றும் அதன் புறநக­ரங்­களில் 2008ஆம் ஆண்­டுக்கும் 2011 ஆம் ஆண்­டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வெள்ளைவானில் கடத்­தப்பட்ட 28 தமிழ் இளை­ஞர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விஷேட பொலிஸ் குழு தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதன்­படி இந்த 28 பேரின் கடத்­த­லுக்கும் கடற்­ப­டை­யி­ன­ருக்கும் உள்­ள­ தாகக் கூறப்­படும் தொடர்­பு­கு­றித்து விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கிடைக்கப் பெற்­றுள்ள சாட்­சி­யங்­க­ளுக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண கேச­ரிக்கு தெரி­வித்தார்.

28 தமிழ் இளைஞர்களின் கடத்தல் குறித்து புல­னய்வுப் பிரிவு ஆரம்­பித்­துள்ள விஷேட விசா­ர­ணை­களில், அந்த இளைஞர்களுக்கு என்ன நடந்­தது, அவர்­களை கடத்­தி­யது யார், கடற்­ப­டை­யி­ன­ருக்கும் கடத்­த­லுக்கும் இடை­யி­லான தொடர்பு என்ன என்­பது உள்­ளிட்ட அனைத்து விட­யங்­களும் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. இந்த 28 பேரும் கொட்­டாஞ்­சேனை, புளூ­மென்டல், பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வளை மற்றும் கல்­கிஸ்ஸ பகு­தி­களில் இருந்து குறிப்­பிட்ட மூன்று வருட காலப்ப­கு­திக்குள் கடத்­தப்பட்­டுள்­ளனர்.

இதில் பிர­தா­ன­மாக தெஹி­வ­ளையில் கடத்­தப்­பட்ட 5 பேர், கொட்­டாஞ்­சே­னையில் கடத்­தப்­பட்ட தந்தை, மகன் உள்­ளிட்­டோரும் அடங்­கு­கின்­றனர். கடந்த 2008 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணி­ய­ளவில் மூன்று தமிழ் மாண­வர்­களும் அவர்­க­ளது நண்­பர்­க­ளான இரண்டு முஸ்லீம் மாண­வர்­களும் தெகி­வ­ளையில் கடத்­தப்­பட்­டனர்.

தற்­போது புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் மொத்­த­மாக 2008 முதல் 2011 வரை மூன்று ஆண்­டு­க­ளுக்குள் கடத்­தப்­பட்­ட­வர்கள் கடத்­த­லுக்கும் கடற்­ப­டை­யி­ன­ருக்கும் உள்ள தொடர்பு குறித்து அவ­தனம் செலுத்­தப்பட்­டுள்­ளது. கடத்­தப்­பட்­ட­வர்கள் கொழும்பு சைத்­திய வீதியில் உள்ள கடற்படை முகாம் மற்றும் திருகோணமலை கடற்படை முகாம் ஆகியவற்றிலேயே வைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும் என சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பிலும் புலனாய்வுப் பிரிவு அவதானம் செலுத்தியுள்ளது.