செய்திகள்

கொழும்பில் நினைவேந்தல் நிகழ்வு; பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் ஆலயத்தில் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக இன்று காலை இடம்பெற்ற மோட்ச அர்ச்சனை மற்றும் தீபாராதனை நிகழ்வு தொடர்பாக பொலிஸார் விசாரணை செய்துள்ளனர்.

சிவில் உடையில் 06 புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நிகழ்வுகளை புகைப்படம் பிடித்ததாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளர் சண். குகவரதன் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனின் தலைமையில் மே 18 துக்க நிகழ்வுகள் எதுவும் அனுஷ்டிக்கப்படுகின்றதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவுபெற்று ஆறு வருடங்கள் கடந்த நிலையில் உயிரிழந்த உறவுகளைக் கூட நினைவுகூர தமிழர்களுக்கு உரிமையில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.